- Back to Home »
- Emulator Problem and Solution »
- எமுலேட்டர் சிக்கலும் அதற்கான தீர்வும்
Posted by : Unknown
Saturday, 17 December 2016

பெரும்பாலும் பலரும் சந்தித்திருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால் எமுலேட்டர் எனப்படும் ANDROID VIRTUAL DEVICE தொடங்குவதில் ஏற்ப்படும் பிரச்சனைதான்.ஏன் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். VT(Virtualization Technology) எனப்படும் தொழில்நுட்பம் நமது கணினியில் இருந்தால் இந்த பிரச்சணையை நாம் சந்திக்க வேண்டியதில்லை,ஆனால் தமிழக அரசின் மடிகணினிகளில் இந்த VT(Virtualization Technology) நமக்கு கிடைப்பதில்லை. நாம் விலை கொடுத்து வாங்கிய சமீபத்திய கணினிகளில் இந்த தொழில்நுட்பம் இணைந்தே வருகின்றது.எதற்காக இந்த VT(Virtualization Technology) தொழில்நுட்பம் என்றால் அதிவிரைவான செயலாக்கத்திற்காகவே,சரி இந்த தொழில்நுட்பத்தை யார் நமக்கு வழங்குகிறார்கள் என்று பார்க்கலாம்,இதனை கூகுள் நிறுவனத்துடன் இனைந்து இண்டெல் நிறுவனம் நமக்கு அளிக்கின்றது.சரி இண்ட்டெல் கணினிகளை வைத்திருப்பவர்கள் இந்த பிரச்சணையை சந்திக்க வேண்டியதில்லை,ஆனால் AMD Processor உள்ள கணினியினை வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த பிரச்சணையை சந்தித்துதான் ஆக வேண்டும்.சரி நாங்கள் இந்த பிரச்சனையை தீர்க்கவே முடியாதா என கேட்கிறீர்களா?.முடியும் உங்கள் Processor ஐ மாற்றி அமைக்கலாம் ஆனால் செலவு அதிகமாகும், இல்லை வேறு மாற்று வழிகளை மேற்கொள்ள விரும்பினால் உங்களுக்கு இந்த பதிவு உதவி செய்யும்.உங்களுக்கு உதவி செய்யவே நிறைய எமுலேட்டர்ஸ் பல்வேறு நிறுவனங்களால் அளிக்கப்படுகின்றது அதனை நாம் மாற்று தீர்வாக தேர்ந்தெடுக்கலாம்.அதில் நான் பரிந்துரைப்பது NOX(Android Player) ஐ தான்,மிகவும் எளிமையாகவும் அதிவிரைவாகவும் நமது அப்ளிகேசன்களை இயக்கி கொள்ள முடியும்.அது எவ்வாறு என்று அடுத்த பதிவில் காணலாம்