NOX-Player ஒரு பார்வை



வணக்கம் அன்பர்களே சென்ற பதிவில் NOX-Player ன் பெயரை பற்றி குறிப்பிட்டிருந்தேன்.இந்த பதிவில் NOX-Player  பற்றி இப்பொழுது நாம் விரிவாக காணலாம்.ஆண்ட்ராய்டு அப்ளிகேசன்களை நமது விண்டோஸ்,லினக்ஸ்,மேக்,கணினிகளில் செயல்படுத்தி பார்க்க நிறைய ப்ளேயர்கள் நமக்கு கிடைக்கின்றன.இதன் உதவியுடன் நாம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் அப்ளிகேசன்களை நிறுவி உபயோகிப்பது போன்று நமது கணினிகளில் நிறுவி பயன்படுத்தி கொள்ளலாம்.நிறைய பிளேயர்கள் நமக்கு கிடைத்தாலும் அதன் செயல்பாடு நம்மை திருப்தி படுத்தும் என்று கூற இயலாது.அதிவேக இணைய இணைப்பு இருப்பவர்களுக்கு எந்த பிரச்சணையும் இல்லை ஆனால் இணைய இணைப்பு இல்லாமல்,வேகம் குறைவாக உள்ளவர்களின் நிலை???,அவர்களுக்காகவே நான் இந்த NOX-Player ஐ பரிந்துரைக்கிறேன்.இதனை உபயோகிப்பது எளிது,உங்களின் நேரத்தை சேமிக்கும் திறன் வாய்ந்தது.மிகவும் அதி விரைவாக உங்களின் அப்ளிகேசன்களை ரன் செய்ய உதவும்,மற்ற ஆப் பிளேயர்களின் செயல்பாடு இந்த அளவிற்கு என்னை ஈர்க்கவில்லை,கீழ் உள்ள இணைப்பில் சென்ற் தறவிறக்கம் செய்து உபயோகித்து கொள்ளவும்.

Download Now

சாதாரணமானவர்கள் பொழுது போக்கிற்க்காக இந்த Nox-Player உபயோகிக்கலாம்,ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்க நினைக்கும் அன்பர்கள்,தங்கள் கணினியில் ஆண்ட்ராய்டு ஸ்டுடியோ நிறுவி அப்ளிகேசன் உருவாக்கிய பிறகு அதை ரன் செய்யும் பொழுது உங்களது எமுலேட்டர் ரன் ஆகவில்லை என்றாலும்,எமுலேட்டர் தொடங்கும் வேகம் குறைவாக இருப்பின் நீங்கள் இந்த NOX-Player ஐ தேர்ந்தெடுக்கலாம்,மிகவும் வேகமாக உங்களது அப்ளிகேசனை இந்த NOX-Player இன் உதவியுடன் ரன் செய்து பார்க்கலாம்,எனது அடுத்த பதிவில் இந்த NOX-Player  போன்ற பிளேயர்களை எப்படி நமது ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவில் இணைப்பது என்று காணலாம்.
Sunday 18 December 2016
Posted by Unknown

எமுலேட்டர் சிக்கலும் அதற்கான தீர்வும்

Image result for android emulator

பெரும்பாலும் பலரும் சந்தித்திருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால் எமுலேட்டர் எனப்படும் ANDROID VIRTUAL DEVICE தொடங்குவதில் ஏற்ப்படும் பிரச்சனைதான்.ஏன் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். VT(Virtualization Technology) எனப்படும் தொழில்நுட்பம் நமது கணினியில் இருந்தால் இந்த பிரச்சணையை நாம் சந்திக்க வேண்டியதில்லை,ஆனால் தமிழக அரசின் மடிகணினிகளில் இந்த  VT(Virtualization Technology) நமக்கு கிடைப்பதில்லை. நாம் விலை கொடுத்து வாங்கிய சமீபத்திய கணினிகளில் இந்த தொழில்நுட்பம் இணைந்தே வருகின்றது.எதற்காக இந்த VT(Virtualization Technology) தொழில்நுட்பம் என்றால் அதிவிரைவான செயலாக்கத்திற்காகவே,சரி இந்த தொழில்நுட்பத்தை யார் நமக்கு வழங்குகிறார்கள் என்று பார்க்கலாம்,இதனை கூகுள் நிறுவனத்துடன் இனைந்து இண்டெல் நிறுவனம் நமக்கு அளிக்கின்றது.சரி இண்ட்டெல் கணினிகளை வைத்திருப்பவர்கள் இந்த பிரச்சணையை சந்திக்க வேண்டியதில்லை,ஆனால் AMD Processor உள்ள கணினியினை வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த பிரச்சணையை சந்தித்துதான் ஆக வேண்டும்.சரி நாங்கள் இந்த பிரச்சனையை தீர்க்கவே முடியாதா என கேட்கிறீர்களா?.முடியும் உங்கள் Processor ஐ மாற்றி அமைக்கலாம் ஆனால் செலவு அதிகமாகும், இல்லை வேறு மாற்று வழிகளை மேற்கொள்ள விரும்பினால் உங்களுக்கு இந்த பதிவு உதவி செய்யும்.உங்களுக்கு உதவி செய்யவே நிறைய எமுலேட்டர்ஸ் பல்வேறு நிறுவனங்களால் அளிக்கப்படுகின்றது அதனை நாம் மாற்று தீர்வாக தேர்ந்தெடுக்கலாம்.அதில் நான் பரிந்துரைப்பது NOX(Android Player) ஐ தான்,மிகவும் எளிமையாகவும் அதிவிரைவாகவும் நமது அப்ளிகேசன்களை இயக்கி கொள்ள முடியும்.அது எவ்வாறு என்று அடுத்த பதிவில் காணலாம்
Saturday 17 December 2016
Posted by Unknown

ஆண்ட்ராய்டு ஸ்டுடியோ நிறுவுதலும் சில சிக்கல்களும்


ஆண்ட்ராய்டு ஸ்டூடியோ கூகுள் நிறுவனத்தால் அளிக்கப்படும் ஒரு டெவெலப்மெண்ட் கருவியாகும்,இதன் உதவியுடன்  ஆண்ட்ராய்டு அப்ளிகேசன்களை நாம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கலாம்.இதனை நீங்கள் கூகுளின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.இணைய இணைப்பு மிகவும் குறைவாக உள்ள அன்பர்கள் தங்கள் நண்பர்களிடம் இருந்தால் பெற்று நிறுவி கொள்ளுங்கள்.
Click Here to Download ANDROID STUDIO என்ற இணைப்பில் சென்று தறவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.இதன் நிறுவல் சாதாரணமாக அனைவரும் மேற்கொள்ளலாம்,நிறுவல் முடிந்த பிறகு சில பிரச்சனைகளை அனைவரும் சந்திக்க இயலும் அதை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்.ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தினால் போதுமானது,அடுத்து நாம் அப்ளிகேசன் உருவாக்கத்தில் கவனம் செலுத்த முடியும்.
முக்கியமாக ஆண்ட்ராய்டு ஸ்டுடியோ நிறுவல் முடிந்து ஓப்பன் செய்யும் பொழுது இரண்டு பிரச்சனைகளை சந்தித்து இருக்க வாய்ப்பு உண்டு அதில் முதல் பிரச்சணை JDK காணவில்லை என்றும்,இரண்டாவதாக Gradle என்பதில் மெமரி சைஸ் பத்தவில்லை என்று வரும் அதனை கண்டு பயப்படாமல் JDK உங்களது கணினியில் எந்த கோலனில் நிறுவி உள்ளீர்களோ அதனை சரியாக தேர்வு செய்யவும்,முதல் பிரச்சனை முடிந்தது,இரண்டாவதாக GRADLE பிரச்சனை அதை சரி செய்ய ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவில் நீங்கள் புது அப்ளிகேசன் ஓப்பன் செய்திரிந்தால் உங்களின் இடது புறம் Gradle என்ற அமைப்பினை காண இயலும்.அதில் டபுள் கிளிக் செய்யுங்கள்,அப்பொழுது கிடைப்பதில் Properties என்பதனை கிளிக் செய்து XXMaxPremSize=512m என எழுதி கொள்ளுங்கள்,அவ்வளவுதான் இனி உங்களது பிரச்சனை முடிந்தது நீங்கள் உங்கள் டெவெலப்மெண்டினை தொடங்களாம்.

ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்க தேவையான மென்பொருட்கள்


ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்கத்தினை மேற்கொள்ள நமக்கு சில அடிப்படை மென்பொருட்கள் தேவை.அவற்றின் உதவியுடன் நாம் நமக்கு விருப்பமான அப்ளிகேசன்களை உருவாக்கி கொள்ளலாம்.தேவையான மென்பொருட்கள் கீழே பட்டியல் இட்டுள்ளேன்.


நாம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்கத்தினை எக்ளிப்ஸ்(Eclipse) உதவியுடனும் மேற்கொள்ளலாம்,அதற்கு நாம் செய்ய வேண்டியது மேல் உள்ள Eclipse(ADT) என்பதனை கிளிக் செய்து.எக்ளிப்ஸின் அதிகார பூர்வ இணையதளத்தில் தறவிரக்கம் செய்து கொள்ளவும்.அதனுடன் ADT(Android Development Toolkit) எனப்படும் ப்ளகின் ஐ ஆண்ட்ராய்டின் அதிகார பூர்வ தளத்தில் இருந்து நிறுவி கொள்ளலாம்.அதன் பின்பு நாம் அப்ளிகேசன் உருவாக்கத்தினை மேற்கொள்ளலாம்.ஆனால் நீங்கள் அந்த தேர்வினை மேற்கொள்ள வேண்டாம் ஏன் என்றால் கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பினை டெவெலப்பர்ஸ் அனைவருக்கும் கொடுத்தது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் ”நாங்கள் எங்களது சப்போர்ட்டினை எக்ளிப்ஸிற்கு வழங்குவதை அதிகாரபூர்வமாக நிறுத்துகிறோம்,இனி நீங்கள் நாங்கள் அளிக்கும் கருவியான ANDROID STUDIO வின் உதவியுடன் உங்கள் டெவெலப்மெண்டினை மேற்கொள்ளவும்” என அறிவித்துள்ளது.இது பல தரப்பினரிடையே எதிர்ப்பினை தெரிவித்தாலும் இறுதியில் கூகுளின் வாதமே வென்றது எனலாம்.அனைத்து தரப்பினரும் இன்று ANDROID STUDIO விற்கு மாறிவிட்டனர்.ஒரு சிலர் இன்றும் எக்ளிப்ஸினை உபயோகிப்பதை காண முடிகிறது.நீங்களும் உபயோகிக்க வேண்டும் என்றால் உபயோகிக்கலாம் தற்போதைக்கு பிரச்சனை இல்லை, ஆனால் பின்வரும் நாட்களில் நீங்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடலாம்,ஏனெனில் முழு சப்போர்ட்டினையும் நிறுத்தியதால் உங்களுக்கு பின் நாளில் வரும் சந்தேகங்களை தீர்க்க முடியாமல் போகலாம் அன்று நீங்கள் கட்டாயம் ANDROID STUDIO விற்கு மாற வேண்டும்.அந்த முடிவினை இப்பொழுதே மேற்கொள்ளலாமே.
Posted by Unknown

ஜாவா அவசியமே



ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்க நினைக்கும் அன்பர்கள் அனைவருக்கும் ஜாவா நிரலாக்க மொழி(Java Programming). அவசியம் தெரிந்து இருக்க வேண்டும்.ஏனெனில் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்கம் முழுமையும் ஜாவாவினை அடிப்படையாக கொண்டது.அட்வான்ஸ் ஜாவா தெரிந்து இருக்க தேவை இல்லை. அடிப்படை ஜாவா(Core Java) தெரிந்து இருந்தாலே போதுமானது.

Posted by Unknown

ஆண்ட்ராய்டு ஒரு பார்வை

இன்றுடன் பல வருடங்கள் ஆகிவிட்டது.ஆண்ட்ராய்டு என்னும் இயக்க முறைமை அறிமுகம் ஆகி.தொலைபேசி சாதனங்களுக்கான இயக்க முறைமையாக அறிமுகம் செய்யப்பட்டு இன்று பல்வேறு கருவிகளையும் கட்டுபடுத்தும் ஒரு இயக்க முறைமையாக உருவெடுத்த்துள்ளது.பணக்காரன் முதல் பாமரன் வரை அனைவரின் கையிலும் இன்று இந்த ஆண்ட்ராய்டு இயக்க முறைமை உள்ள தொலைபேசிகளை காணலாம்.இன்று கணினிகளை இந்த ஆண்ட்ராய்டு போன்கள் ஓரம் கட்டிவிட்டன என்றே தான் கூற வேண்டும்.முன்பெல்லாம் நாம் ஒரு இணையதளத்தை காண வேண்டும் என்றாலும் நமக்கு வேண்டிய டாகுமெண்ட்களை பார்க்க உருவாக்க வேண்டும் என்றாலும் கணினியின் உதவி இன்றி பார்க்க இயலாது.ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை அனைத்தையும்  ஒரு ஆண்ட்ராய்டு போன் இருந்தால் சாத்திய படுத்தி விடலாம்.அதன் பலமே அதனுடைய செயலிகள்(APPS) தான்.இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் உரிமத்தை என்று கூகுள் நிறுவனம் தனதாக்கியதோ அன்றிலிருந்தே.இதன் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கியது எனலாம். இதற்கென தனி துறையை உருவாக்கி அதன் மூலம் தனது இயக்க முறைமையான ஆண்ட்ராய்டினை பல்வேறு நிறுவனங்களின் மூலம் ஏற்படுத்தபட்ட உடன்படிக்கையின் படி அதிநவீன தொலைபேசிகளில் நிறுவி மக்களுக்கு அளித்து வருகின்றது கூகுள் நிறுவனம்.இயக்க முறைமை அளித்தால் மட்டும் போதுமா,அதில் செயல்படும் அப்ளிகேசன் வேண்டாமா? இந்த தேவையையும் தனது ஃப்ளே ஸ்டோர் உதவியுடன் செய்து கொடுக்கிறது கூகுள் நிறுவனம்.ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான அப்ளிகேசன்கள் தரவிறக்கம் மற்றும் தரவேற்றம் செய்யப்படுகின்றன. தரவிறக்கம் எவர் வேண்டும் என்றாலும் செய்யலாம்.அதற்கு ஒரு ஈமெய்ல் முகவரி மற்றும் ஒரு ஆண்ட்ராய்டு தொலைபேசி இருந்தால் போதும்.ஆனால் தரவேற்றம் செய்ய அனைவராலும் முடியாது அதற்கென பிரத்தியோகமாக பதிவு செய்ய வேண்டும்.இந்த வேலையினை டெவலப்பர்ஸ் மட்டுமே மேற்கொள்ள முடியும்.அது எப்படி என்று வேறொரு பதிவில் காணலாம்.சரி நாமும் ஒரு அப்ளிகேசன் உருவாக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும்.சரி அது எவ்வாறு என்று இனி நாம் தெளிவாக காணலாம்.
Friday 16 December 2016
Posted by Unknown

Follow us on Facebook

Popular Post

Powered by Blogger.

- Copyright © Easy to learn Codings -