Posted by : Unknown
Friday, 16 December 2016

இன்றுடன் பல வருடங்கள் ஆகிவிட்டது.ஆண்ட்ராய்டு என்னும் இயக்க முறைமை அறிமுகம் ஆகி.தொலைபேசி சாதனங்களுக்கான இயக்க முறைமையாக அறிமுகம் செய்யப்பட்டு இன்று பல்வேறு கருவிகளையும் கட்டுபடுத்தும் ஒரு இயக்க முறைமையாக உருவெடுத்த்துள்ளது.பணக்காரன் முதல் பாமரன் வரை அனைவரின் கையிலும் இன்று இந்த ஆண்ட்ராய்டு இயக்க முறைமை உள்ள தொலைபேசிகளை காணலாம்.இன்று கணினிகளை இந்த ஆண்ட்ராய்டு போன்கள் ஓரம் கட்டிவிட்டன என்றே தான் கூற வேண்டும்.முன்பெல்லாம் நாம் ஒரு இணையதளத்தை காண வேண்டும் என்றாலும் நமக்கு வேண்டிய டாகுமெண்ட்களை பார்க்க உருவாக்க வேண்டும் என்றாலும் கணினியின் உதவி இன்றி பார்க்க இயலாது.ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை அனைத்தையும் ஒரு ஆண்ட்ராய்டு போன் இருந்தால் சாத்திய படுத்தி விடலாம்.அதன் பலமே அதனுடைய செயலிகள்(APPS) தான்.இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் உரிமத்தை என்று கூகுள் நிறுவனம் தனதாக்கியதோ அன்றிலிருந்தே.இதன் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கியது எனலாம். இதற்கென தனி துறையை உருவாக்கி அதன் மூலம் தனது இயக்க முறைமையான ஆண்ட்ராய்டினை பல்வேறு நிறுவனங்களின் மூலம் ஏற்படுத்தபட்ட உடன்படிக்கையின் படி அதிநவீன தொலைபேசிகளில் நிறுவி மக்களுக்கு அளித்து வருகின்றது கூகுள் நிறுவனம்.இயக்க முறைமை அளித்தால் மட்டும் போதுமா,அதில் செயல்படும் அப்ளிகேசன் வேண்டாமா? இந்த தேவையையும் தனது ஃப்ளே ஸ்டோர் உதவியுடன் செய்து கொடுக்கிறது கூகுள் நிறுவனம்.ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான அப்ளிகேசன்கள் தரவிறக்கம் மற்றும் தரவேற்றம் செய்யப்படுகின்றன. தரவிறக்கம் எவர் வேண்டும் என்றாலும் செய்யலாம்.அதற்கு ஒரு ஈமெய்ல் முகவரி மற்றும் ஒரு ஆண்ட்ராய்டு தொலைபேசி இருந்தால் போதும்.ஆனால் தரவேற்றம் செய்ய அனைவராலும் முடியாது அதற்கென பிரத்தியோகமாக பதிவு செய்ய வேண்டும்.இந்த வேலையினை டெவலப்பர்ஸ் மட்டுமே மேற்கொள்ள முடியும்.அது எப்படி என்று வேறொரு பதிவில் காணலாம்.சரி நாமும் ஒரு அப்ளிகேசன் உருவாக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும்.சரி அது எவ்வாறு என்று இனி நாம் தெளிவாக காணலாம்.